Please specify the product's required option(s).

Ponnanganni Keerai பொன்னாங்கண்ணிகீரை

1 Bundle.
கண்ணிற்கு ஒளி தரும்:
இக்கீரையின் காம்புப்பகுதிகளையும் சேர்த்து சமைத்தால்தான் முழுமையான சத்து கிடைக்கும். இதிலுள்ள சத்துக்கள் கண்களுக்கு ஒளியையும் நல்ல தெளிவான பார்வையையும் அளிக்கும். அத்துடன் கண் தொடர்புடைய அனைத்தையும் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. இந்த கீரையை சமைத்து சாப்பிடுவதுடன் வேறுவகையிலும் பயன்படுத்தலாம். பொன்னாங்கன்னிக்கீரையை பசு வெண்ணெயில் வதக்கி இரு கண்களில் வைத்து துணியால் கட்ட கண் நோய்கள் போய்விடும். பார்வை தெளிவு பெறும். பொன்னாங்கன்னியில் இருந்து தைலம் எடுத்து தடவி வந்தால் கண் எரிச்சல், கண்வலி குணமடையும். கண் குளிர்ச்சியடையும். இக்கீரையை பகலில் மட்டுமே சாப்பிட வேண்டும்.

உடல் உஷ்ணம் தணியும்:
பொன்னாங்கண்ணி கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளவதன் மூலம் இதயம் வலுப்பெறும், ரத்த ஓட்டம் சீரடையும், மூளை, நரம்புகள் பலம் பெற்று சீரான நிலையில் இயக்கம் பெறும். வயிறு, குடல் கல்லீரல், மண்ணீரல், போன்ற உறுப்புகளின் பலத்திற்கு இக்கீரை பெரிதும் துணை புரிகிறது. இது உடலில் மிகுதிப்படும் உஷ்ணத்தை தணித்து உடலை சமநிலையில் வைத்திருக்கும். உடலுக்கு வலுவையும் நல்ல வளர்ச்சியையும் அளிக்க வல்லது. உஷ்ணமிகுதியால் மூலநோய் ஏற்பட்டு வருந்துபவர்கள் இக்கீரையை சாப்பிட்டு வர நோயிலிருந்து நிவாரணம் பெறலாம். ரத்தம் கொட்டும் மூலமாக இருந்தாலும் குணமாகும்.


Availability: In stock

Rs. 20.00