• Call 90 2545 2545 | support@ffhp.in | WhatsApp 98409 52870 | Delivery Areas
Login to earn Reward Points for sharing!

Amaranth-Destem முளைக்கீரை

Quick Overview

1Packet


தண்டுக்கீரையின் இளம் செடியே இளஞ்செடியே முளைக்கீரையாகும். இதனால் இளங்கீரை என்ற மற்ற பெயரும் இதற்கு உண்டு. முளைக்கீரை உணவுச் சத்துக்கள் மிகுந்த ஒரு கீரையாகும். கால்சியம் சத்து நிறைந்துள்ள இந்த கீரையில் ஏ,பி, வைட்டமின்கள் அதிகம் காணப்படுகின்றன.. எலும்புகள் வலுவடையும் முளைக் கீரையில் சுண்ணாம்புச் சத்து அதிகம் இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கும், வாலிபர்களுக்கும் அதிகம் கொடுக்கலாம். இதனால் எலும்பு வலுவடைவதோடு உடல் வளர்ச்சி அதிகரிக்கும்.

 வயதானவர்கள் இந்த கீரையை தினசரி உண்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் தேவையான சக்தியை அளிக்கும். முளைக்கீரை ஒன்றே எல்லா வகையான தாதுக்களையும் உள்ளடக்கியுள்ளது.

 இக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்தத்தை சுத்தம் செய்து, உடலுக்கு அழகும் மெருகும் ஊட்டவல்லது. இதில் அடங்கியுள்ள மணிச்சத்து மூளைவளர்ச்சி மற்றும் எலும்பினுள்ளே ஊண் அல்லது மேதஸ் என்னும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. இது மாலைக்கண்நோய்க்கு சிறந்த மருந்தாகும். முளைக் கீரை சாப்பிடுவதால் சொறி சிரங்கு மறையும், மூக்கு தொடர்புடைய வியாதிகள் குணமடையும்., பல்நோய் குணமடையும். நரம்பு தளர்ச்சி பலமடையும். பலவீனத்தை போக்கி பலம் உண்டாகும். பசியை தூண்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். கண்பார்வையை தெளிவுபடுத்தும். சோம்பலை ஒழித்து சுறுசுறுப்பை உண்டு பண்ணும். அறிவை கூர்மையாக்கும். இக்கீரையை கடைந்து உண்டால் உட்சூடு,இரத்த கொதிப்பு, பித்த எரிச்சல் முதலிய நோய்கள் குண்மாகும்.

 குறிப்பு : முளைக்கீரையை சிறுநீரகப் பிரச்னை, கல் அடைப்பு, அலர்ஜி இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.


 மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது


அற்றது போற்றி உணின்.


முளைக்கீரை கடைசல்


Ingredients:

1 bunch - Mulai keerai
2 red chilly
1/2 sp mustard seeds
1/2 usud dal
1 pinch asafetida
1/2 sp oil
Salt

Method:

Clean keerai and chop it.
In a pan make seasoning with 1/2 sp oil.
Put chopped keerai.
Add asafetida. Mix well
Pour 1/2 cup water and salt.
Close the lid.
Allow it to cook.
Open and mash with a big 'karandi'.
Remove and serve with 'vathal kuzhumbu' or serve with hot rice.


தேவையானப் பொருட்கள்:
முளைக்கீரை - ஒரு கட்டு
சின்ன வெங்காயம் - 7
பூண்டு - 8 பல்
மிளகாய் வற்றல் - ஒன்று
கடுகு - அரை தேக்கரண்டி
கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - அரைக்கரண்டி

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பூண்டை போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
பூண்டு வெந்ததும் சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிய முளைக்கீரையை சேர்த்து கால் கப் தண்ணீர் தெளித்து மூடி வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
கீரை வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிட்டு, கீரையையும், பூண்டையும் சேர்த்து கரண்டியால் மசிக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, மிளகாய் வற்றல், வட்டமாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்பு மசித்த முளைக்கீரையுடன் உப்பு மற்றும் தாளித்த பொருள்களை சேர்க்கவும். பின்பு கீரையுடன் தாளித்த பொருள்கள் ஒன்றாக சேரும்படி மசிக்கவும்.

சுவையான முளைக்கீரை பூண்டுக் கடைசல் தயார்.

Availability: In stock

Rs. 30.00
OR

Amaranth முளைக்கீரை-Destem

Click on above image to view full picture

More Views

  • Amaranth முளைக்கீரை-Destem

Details

1Packet