• Call 90 2545 2545 | support@ffhp.in | WhatsApp 98409 52870 | Delivery Areas
Login to earn Reward Points for sharing!

Sorrel Leaves புளிச்சகீரை

Quick Overview

1 Bundle


Pulichakeerai is a very rich source of Iron, vitamins, folic acid and anti-oxidants essential for human nutrition. Similarly, "Pulichakeerai" is popular in Andra as well, which is called "Gongura". Pulichakeerai comes in two varieties, green stemmed leaf and red stemmed. The red stemmed variety is more sour than the green stemmed variety.

புளிச்ச கீரையில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.
குறிப்பாக உடல் வெப்பத்தால் அவஸ்தைப்படுபவர்கள், புளிச்ச கீரையை சாப்பிட்டால் தணிந்துவிடும்.


 குறிப்பு : இது பித்தத்தை அதிகப்படுத்தும் தன்மையுடையது என்பதால் பித்தம் சம்பந்தமுடையவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.
இரவில் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இரவில் கீரையைச் சேர்த்துக் கொண்டால் குளிர்ச்சியாலும், தூக்கத்தினாலும் சீரண சக்தி குறைந்து செரிமானம் பாதிக்கப்படும். இதனால் கீரைப் பூச்சிகள் வயிற்றில் வளர்ந்து பெரும்பாலோருக்கு வயிற்றுப் பொருமல், வயிற்று உப்பிசம், வயிற்றிரைச்சல் போன்றவை ஏற்படும்.


மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது


அற்றது போற்றி உணின்.



புளிச்ச கீரை துவையல்


தேவையானப் பொருட்கள்:
புளிச்ச கீரை - ஒரு கட்டு
காய்ந்த மிளகாய் - 10
முழு தனியா - 1 1/2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 3 அல்லது 4
பூண்டு - 7 அல்லது 8 பல்
வெங்காயம் - ஒன்று
வெந்தயம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
வதக்கி சேர்க்க:
காய்ந்த மிளகாய் - 6
பூண்டு - 6 பல்

செய்முறை:
கீரையை இலைகளை மட்டும் ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். மேற் சொன்ன மற்ற தேவையானவற்றையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கீரையை தவிர மற்ற பொருட்களை போட்டு வதக்கி கொள்ளவும். வதங்கியதும் எடுத்து ஆற வைக்கவும்.
அதே கடாயில் அலசி வைத்துள்ள கீரையை போட்டு நன்கு வதக்கவும். வதங்கிய கீரையை எடுத்து ஆற வைக்கவும்.
இப்போது முதலில் வதக்கி ஆற வைத்துள்ள மிளகாய் மற்றும் மற்ற பொருட்களை மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும்.
அதனுடன் வதக்கி ஆற வைத்துள்ள கீரையை சேர்த்து தேவையான உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்து வைத்துள்ள கீரை மற்றும் மிளகாய் விழுதை ஒரு கடாயில் போட்டு நன்கு வதக்கவும். இதற்கு எண்ணெய் கொஞ்சம் தாராளமாக விடலாம். அரைத்த விழுது வதங்கி எண்ணெய் மேலே மிதக்கும் வரை நன்கு வதக்கவும்.
வேண்டுமென்றால் சிறிது காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டினை எண்ணெயில் வதக்கி வைத்துக் கொள்ளவும்.
வதக்கிய மிளகாய் வற்றல், பூண்டினை துவையலுடன் சேர்க்கவும். இவை கீரையில் ஊறி சாப்பிடும் போது நன்றாக இருக்கும்.

சுவையான புளிச்ச கீரை துவையல் தயார். இந்த துவையல் 10 - 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

Availability: In stock

Rs. 16.00
OR

Sorrel Leaves

Click on above image to view full picture

More Views

  • Sorrel Leaves

Details

1 Bundle